அம்பர் ஹெர்ட்க்கு பணப்பிரச்சனையா?

ஹாலிவுட் நடிகை அம்பர் ஹெர்ட் சமீபத்தில் தள்ளுபடி துணிக் கடையில் காணப்பட்டதற்கு காரணம் பணத்தட்டுப்பாடா என கேள்வி எழுந்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஹாலிவுட் நடிகை அம்பர் ஹெர்ட் சமீபத்தில் தள்ளுபடி துணிக் கடையில் காணப்பட்டதற்கு காரணம் பணத்தட்டுப்பாடா என கேள்வி எழுந்துள்ளது. 

‘பைரட்ஸ் ஆப் த கரேபியன்’ படத்தில் ‘ஜாக் ஸ்பேரோ’ கதாபாத்திரத்தில் நடித்த ஜானி டெப் உலகப் புகழ் பெற்றார். அவருக்கும் அவரது மனைவிக்கும் 2017இல் விவாகரத்து நடைபெற்றது. பிறகு அம்பர் ஹெர்ட் 2018இல் அளித்த பேட்டி ஒன்றில் அவரது கணவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதனால் ஜானி டெப் அவரது முன்னாள் மனைவி அம்பர் ஹெர்ட் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் சமீபத்தில் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆம்பர் ஹெர்ட்டுக்கு நீதிமன்றம் 10 மில்லியன் டாலரை அபராதாமாக விதித்தது. 

இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்காவின் பிரபலமான தள்ளுபடி துணிக்கடை ஒன்றில் அம்பர் ஹெர்ட் துணி எடுப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. 

நீதிமன்ற தீர்ப்பில் 10 மில்லியன் அபாரதம் விதித்ததால்தான் இப்படி பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதா எனக் கேள்வி எழுந்துள்ளது.

சில ரசிகர்கள் அம்பர் ஹெர்ட் வேண்டுமென்றே அந்தக் கடைக்குச் சென்று இவ்வாறு பச்சாதாபத்தை தேடுவாரென சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com