
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நாயகியாக நடித்து வருபவர் சைத்ரா. சமீபத்தில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 10 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் பதிவிடும் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகி வருகிறது.
சைத்ரா நடிகர் அஜித்துடன் இணைந்து வலிமை படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் பெண்ணாக சைத்ரா வலிமை படத்தில் நடித்திருந்தார். அவரது வேடம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த விடியோவில், இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகும் விடியோவை நடிகர் அவினாஷுடன் முயற்சிக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக அவினாஷ், அவரது முகத்தில் அடித்துவிடுகிறார். இதனால் அவர் தடுமாறி கீழே விழுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.