நடிகை சமந்தா தற்போது 'ஃபேமிலி மேன்' தொடர் இயக்குநர்களின் அடுத்த இணைய தொடரில் நடிக்கவிருக்கிறார். இந்தத் தொடரில் ஹிந்தி நடிகர் வருண் தவானும் நடிக்கவிருக்கிறார்.

இந்த தொடர் குறித்த பணிகளுக்காக சமந்தா மும்பை சென்றுள்ளார். அவருடன் வருண் தவானும் வந்துள்ளார். அப்போது பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் சமந்தாவை சூழ்ந்துகொண்டு கேள்விகளை எழுப்பினர். இதனால் சமந்தாவிற்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.
இதையும் படிக்க | பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' - திரை விமர்சனம் : ஜோசியம் பழிக்குமா?
அப்போது நடிகர் வருண் தவான், 'அவரை பயமுறுத்தாதீர்கள்' என பத்திரிகையாளர்களிடம் கூறி சமந்தாவை பாதுகாப்பாக அழைத்து சென்றார். இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து நடிகர் வருண் தவானுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
'புஷ்பா' படத்தில் சமந்தா நடனமாடிய 'ஊ சொல்றியா மாமா' பாடல் தேசிய அளவில் பெரும் வெற்றிபெற்றது. மேலும் 'தி ஃபேமிலி மேன் 2' தொடரில் சமந்தாவின் நடிப்பும் வட இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதன் காரணமாகவே சமந்தாவிற்கு பத்திரிகையாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். சமந்தா குறித்த செய்திகள் அடிக்கடி வைரலாகி வருகின்றன.
Omggg he is so caring:)
â SandhyaSamanthaFan⢠(@SandhyaSamFan) March 11, 2022
Thanks @Varun_dvn
@Samanthaprabhu2 #SamanthaRuthPrabhu #VarunDhawan pic.twitter.com/mJAo2iO8Ak
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








