எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்றுமுதல் தொடக்கம் விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

ஆர்ஆர்ஆர்: கோலே பாடலின் விடியோ வெளியீடு

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கியுள்ளார்.

Updated On :

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கியுள்ளார்.

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது. முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடித்துள்ளார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்கள். ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசை. ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார்.

அல்லுரி சீதா ராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது.

பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடித்துள்ளார்கள். ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஆர்ஆர் படத்தை தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகி குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு ஆர்ஆர்ஆர் படத்தின் ஹிந்திப் பதிப்பு நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஆங்கிலம், கொரியன் உள்பட வெளிநாட்டு மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. தொலைக்காட்சி உரிமை ஜீ சினிமா (ஹிந்தி), ஸ்டார் (தெலுங்கு), விஜய் டிவி (தமிழ்), ஏசியாநெட் (மலையாளம்), ஸ்டார் (கன்னடம்) போன்றவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள கோலே பாடலின் காணொளி வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி எழுதிய இப்பாடலை விஷால் மிஸ்ரா, பென்னி தயால், சஹிதி, ஹரிகா நாராயண் பாடியுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.