சீனாவில் ஹிந்திப் படங்களுக்கு நிகராக வசூலை அள்ளுமா கனா?

2018-ல் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான கனா படம், சீனாவில் இந்த வாரம் வெளியாகவுள்ளது.
சீனாவில் ஹிந்திப் படங்களுக்கு நிகராக வசூலை அள்ளுமா கனா?

2018-ல் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான கனா படம், சீனாவில் இந்த வாரம் வெளியாகவுள்ளது.

சீனாவில் இந்தியப் படங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. இதுவரை அங்கு எட்டு ஹிந்திப் படங்கள் ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளன. 2019 மே மாதம், மறைந்த ஸ்ரீதேவி நடித்த மாம் படம் சீனாவில் வெளியாகி, ரூ. 100 கோடி வசூலித்த 8-வது இந்தியப் படம் என்கிற பெருமையை அடைந்தது.

2018-ல் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான படம் - கனா. இந்தப் படம் மார்ச் 18 அன்று சீனாவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் விளம்பர போஸ்டர்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 

இதற்கு முன்பு பாகுபலி, 2.0 ஆகிய தென்னிந்தியப் படங்கள் சீன மொழியில் டப் செய்து சீனாவில் வெளியிடப்பட்டன. எனினும் இரு படங்களாலும் சீனாவில் ரூ. 100 கோடி வசூலை எட்டமுடியவில்லை. ஹிந்திப் படங்களுக்கு நிகராக சீனாவில் தென்னிந்தியப் படங்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. 

சீனாவில் 15 மில்லியன் டாலர் (ரூ. 100 கோடி) வசூலித்த இந்தியப் படங்கள்

2015: பிகே 
2017: டங்கல் ( சீனாவில் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான வசூல்)  
2018: சீக்ரெட் சூப்பர்ஸ்டார் ( சீனாவில் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான வசூல்)
2018: ஹிந்தி மீடியம்  
2018: பஜ்ரங்கி பைஜான்  
2018: ஹிச்கி 
2019: அந்தாதுன் 
2019: மாம் 

ஹிந்திப் படங்களுக்குப் போட்டி போடும் வகையில் கனா படம் சீனாவில் நல்ல வசூலைப் பெறுமா என்பது விரைவில் தெரிந்துவிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com