அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

அஜித்தின் 'வலிமை' ஓடிடியில் வெளியாகும் நாள் குறித்த தகவல்

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் நாள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :19 மார்ச் 2022, 11:18 am

DIN

ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்திருந்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் நல்ல வசூலை இந்தப் படம் பெற்றது. 

ஒட்டுமொத்தமாக இந்தப் படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படம் ஜி5 ஓடி தளத்தில் வருகிற மார்ச் 24 ஆம் தேதி, அல்லது 25 தேதி வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தபடி படம் வெளியாகி ஒரு மாதத்துக்கு பிறகு ஓடிடியில் வெளியாகவுள்ளது.

வலிமை படத்தில் இயக்குநர் வினோத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாடல்களுக்கு மட்டும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். இந்தப் படத்தின் பின்னணி இசையை ஜிப்ரான் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள ஏகே 61 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.