தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பிக்பாஸ் நடிகரின் படத்தை இயக்கும் சேரன்

இயக்குநர் சேரனின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :22 மார்ச் 2022, 12:24 pm

DIN

'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்', 'பாண்டவர் பூமி', 'வெற்றிக்கொடிகட்டு', 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கியவர் சேரன். நீண்ட இடைவேளைக்கு பிறகு திருமணம் படத்தை இயக்கினார். 

பிக்பாஸில் கலந்துகொண்ட அவர் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார். சில காரணங்களால் அந்தப் படம் துவங்கப்படவில்லை. 

இந்த நிலையில் இயக்குநர் சேரன் அடுத்ததாக இயக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் பிக்பாஸ் ஆரி நாயகனாக நடிக்க, கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

மேலும் 'பேச்சுலர்' படத்தின் மூலம் கவனம் பெற்ற திவ்யபாரதி இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.