
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, நடிகர் செல்வராகவன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ரெடின் கிங்க்ஸ்லே, அபர்னா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | காதலுக்கு வயது 23: அஜித் ஷாலினிக்கு கொடுத்த முத்தம்: முன்னுதாரணமாக திகழ்வதாக ரசிகர்கள் நெகிழ்ச்சி
இந்தப் படம் வருகிற ஏப்ரல் 13 திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎஃப் 2 படமும் வெளியாவதால், இரண்டு படங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில் இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. மேலும் இந்தப் படம் 2 மணிநேரம் 35 நிமிடம் ஓடக் கூடியது.
#BeastFromApril13@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #Beast pic.twitter.com/htH6dTPX2q
— Sun Pictures (@sunpictures) March 22, 2022