ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

உண்மையில் 'பீஸ்ட்' பட கதை இதுதானா ? வெளியான போஸ்டர் மூலம் உறுதிசெய்த ரசிகர்கள்

பீஸ்ட் கதை குறித்த தகவலை சமீபத்தில் வெளியான போஸ்டர் உறுதிபடுத்தியுள்ளது. 

News image
Updated On :26 மார்ச் 2022, 1:05 pm

DIN

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் திரைக்குவரவிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்த நிலையில் வணிக வளாகம் ஒன்றை தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு நடிகர் அந்த வணிக வளாகத்தை மீட்பதுதான் 'பீஸ்ட்' கதை என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது வெளியான போஸ்டர் அதனை உறுதி செய்துள்ளது. 

Story image

'பீஸ்ட்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை அறிவிக்கும் விதமாக வெளியான போஸ்டரில் வணிக வளாகம் ஒன்றில் தீவிரவாதிகள் சுற்றி வளைப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் வெளியான கதை உண்மை என்பது தெரியவந்துள்ளது. 

'பீஸ்ட்' உடன் வெளியாகும் 'கேஜிஎஃப் 2' திரைப்படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் வெளியாவதால் இரண்டு படங்களுக்கும் இந்திய அளவில் கடும்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.