புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஹிந்தியில் ரீமேக்காகும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா படம்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணைந்து ரௌடி பிக்சர்ஸ் சார்பாக தயாரித்த 'ராக்கி' திரைப்படம் ஹிந்தியில் ரீமேக்காகிறது. 

News image
Updated On :30 மார்ச் 2022, 5:59 am

DIN

விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணைந்து தங்களது ரௌடி பிக்சர்ஸ் சார்பாக தயாரித்த படம் 'ராக்கி'. அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 

Story image

ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் இசைக்கும் தர்புகா சிவாவின் ஒளிப்பதிவிற்கும் பாராட்டுகள் குவிந்தது. இந்தப் படத்தில் பாரதிராஜா, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 

Story image

இந்தப் படம் தற்போது ஹிந்தியில் ரீமேக்காகிறது. வாக்கு ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை ஹிந்தியில் தயாரிக்கிறது. இதனை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார். 

அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'சாணிக் காயிதம்' படத்தை தயாரித்துள்ளார். அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவிருக்கிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.