
2012-ல் காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாலாஜி மோகன். இதன்பிறகு வாயை மூடிப் பேசவும், மாரி, மாரி 2 ஆகிய தமிழ்ப் படங்களை இயக்கினார். ஓடிடியில் இரு இணையத் தொடர்களை இயக்கினார்.
இந்நிலையில் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் பாலாஜி மோகன். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிளிக் சங்கர் என்கிற த்ரில்லர் வகைப் படத்தை ஹிந்தியில் இயக்குகிறார் பாலாஜி மோகன். சங்கர் என்கிற காவலரைக் குறித்த கதை இது. ஜங்லீ நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. கதை, திரைக்கதை - பாலாஜி மோகன், பிங்கி மெண்டஸ். வசனம் - சுமித் அரோரா, சூரஜ். படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றி அறிவிப்பு தற்போது வெளியிடப்படவில்லை.
Excited to announce our next high-concept thriller #ClickShankar with @directormbalaji!
— Junglee Pictures (@JungleePictures) May 2, 2022
The first instalment in the #ClickShankar universe is a perfect blend of action, humor & heart.
Excitement level = Rowdy Baby song #BinkyMendez @Sumitaroraa @suraj_gianani @uzmakhaniman pic.twitter.com/0oMsDLe9qa