

விஜய் நடித்த பிகில் படத்தில் நடிகையாக அறிமுகமானார் காயத்ரி ரெட்டி. அர்ஜுன் நடத்திய சர்வைவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காயத்ரி பங்கேற்று கவனம் பெற்றார். கவின் நடித்த லிஃப்ட் படத்தில் நடித்தார்.
சென்னையைச் சேர்ந்த காயத்ரி, சிறுவயது முதல் விளம்பரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 29 அன்று தனக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக இன்ஸ்டகிராமில் காயத்ரி தெரிவித்துள்ளார். நிச்சயதார்த்த நிகழ்வின் படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.