இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

கமலின் விக்ரம் படத்தில் சூர்யா?: ரசிகர்களுக்கு காத்திருக்கும் 'ட்விஸ்ட்'

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On :

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மன்மதன் அம்பு திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் படத்தில் நடிகர் சூர்யா நட்புக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியது. கமல்ஹாசன் எழுதி பாடிய 'பத்தல... பத்தல...' எனும் பாடல் வெளியான சில மணிநேரங்களில்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

இந்தத் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

2010ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் - திரிஷா நடித்த மன்மதன் அம்பு திரைப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விக்ரம் படத்தின் இறுதிக் காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் சூர்யா தோன்ற உள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.