
ஹன்சிகாவின் 50-வது படம் மஹா. அறிமுக இயக்குநர் யு.ஆர். ஜமீல் இயக்கியுள்ளார். கருணாகரன், தம்பி ராமையா போன்றோரும் நடித்துள்ளார்கள். இசை - ஜிப்ரான்.
2015-ல் வெளியான வாலு படத்தில் சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்தார்கள். இருவரும் காதலிப்பதாக அறிவித்தவர்கள் பிறகு கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்துபோனார்கள். மஹா படத்தின் மூலமாக இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்கள்.
2020-ம் வருடம் அக்டோபர் மாதத்தில் மஹா படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. கடந்த ஜூலை மாதம் தணிக்கை செய்யப்பட்டது.
இந்நிலையில் மஹா படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 10 அன்று திரையரங்குகளில் மஹா படம் வெளியாகவுள்ளது.
Happy to announce our next theatrical project #june10 @SilambarasanTR_ @ihansika @MathiyalaganV9 pic.twitter.com/2y3cq2Cogv
— RK SURESH (@studio9_suresh) May 12, 2022