
பிரம்மா, அனுசரண் ஆகிய இருவரும் இயக்கும் சுழல் இணையத் தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளது. தயாரிப்பு - புஷ்கர், காயத்ரியின் வால்வாட்சர் ஃபிலிம்ஸ்.
கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி போன்றோர் நடிக்கிறார்கள்.
சாமுராய், திமிரு, வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம், சில சமயங்களில், அண்டாவ காணோம் ஆகிய படங்களில் நடித்துள்ள ஸ்ரேயா ரெட்டி, சுழல் படத்தின் படப்பிடிப்பில் தற்போது பங்கேற்று வருகிறார்.
சுழல் படப்பிடிப்பின்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் உடற்பயிற்சி செய்து வருவதாகக் கூறுகிறார் ஸ்ரேயா ரெட்டி. படப்பிடிப்புத் தளத்தில் உடற்பயிற்சி செய்யும் காணொலியை இன்ஸ்டகிராமில் அவர் வெளியிட்டுள்ளார்.