வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

நா.முத்துக்குமார் எழுதிய ‘திகட்ட திகட்ட காதலிப்போம்’ லிரிக்கல் விடியோ வெளியானது!

வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜீன் தாஸ், துஷாரா விஜயன் நடித்த ‘அநீதி’ படத்தின் முதல் பாடல் வெளியானது. 

News image
Updated On :1 நவம்பர் 2022, 6:13 pm IST

வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜீன் தாஸ், துஷாரா விஜயன் நடித்த ‘அநீதி’ படத்தின் முதல் பாடல் வெளியானது. 

வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் ஆகிய படங்களை வசந்தபாலன் இயக்கியுள்ளார். அநீதி என்கிற படத்தையும் தற்போது இயக்கியுள்ளார்.

தனது விருதுநகர் பள்ளி நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை வசந்தபாலன் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் படத்தை வசந்தபாலன் இயக்குகிறார்.

கைதி, மாஸ்டர் படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ், அநீதி படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகி - துஷாரா விஜயன். வனிதா விஜயகுமார், நாடோடிகள் பரணி, சுரேஷ் சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு: எட்வின் சகாய்.

இசை - ஜி.வி. பிரகாஷ். பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதேசி எழுதியுள்ளார்கள். மறைந்த கவிஞர் நா. முத்துக்குமாரின் நட்பின் நினைவாக அவருடைய கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு பாடலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் அப்பாடலைப் பாடியுள்ளார்.

தற்போது இந்தப் பாடல் லிரிக்கல் விடியோவாக வெளியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அர்ஜுன் தாஸ்,“இந்த மழைக்காலத்திற்கு ஏற்ற பாடல்” என பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.