நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவான ‘அந்தகன்’ திரைப்படத்தில் அனிருத் - விஜய்சேதுபதி இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர்.
ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம், இந்தியாவில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனினும் சீனாவில் இந்தப் படத்தின் வசூல் நம்பமுடியாத வகையில் இருந்தது. அங்கு அதன் வசூல் ரூ. 300 கோடியைத் தாண்டியது. இதன்மூலம் சீனாவில் அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களில் 3-ம் இடத்தைப் பிடித்தது. டங்கல் (1,200 கோடி), சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (ரூ. 700 கோடி) படங்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது அந்தாதுன்.
அதுமட்டுமல்லாமல் இந்தப் படம் சிறந்த நடிகர் - (ஆயுஷ்மன் குரானா), சிறந்த திரைக்கதை (தழுவல்), சிறந்த ஹிந்திப் படம் என மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது.
அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரசாந்தின் தந்தை நடிகர் தியாகராஜன் பெற்றுள்ளார். பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக், அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு இயக்குநர் பொறுப்பை தியாகராஜனே ஏற்றுக்கொண்டார். அந்தகன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - ரவி யாதவ், வசனம் - பட்டுக்கோட்டை பிரபாகர்.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்து ’டோரா புஜ்ஜி’ என்கிற ஒரு பாடலை பாடியுள்ளனர். இப்பாடல் பிரம்மாண்டமாக படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

1 தபால் வாக்கை சேகரிக்க மலைப்பாதையில் முக்கால் கி.மீ. நடந்துசென்ற தோ்தல் அலுவலா்கள்

பண மோசடி: போலீஸாா் விசாரணை

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி
தோ்தல் நடத்தை விதிமீறல்: இருவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


