ஜனனி, ஷெரினா, மகேஸ்வரி: 20 பிக் பாஸ் போட்டியாளர்களின் இன்ஸ்டகிராம் பக்கங்கள்!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் 20 போட்டியாளர்களின் இன்ஸ்டகிராம் பக்கங்கள்...
ஜனனி, ஷெரினா, மகேஸ்வரி: 20 பிக் பாஸ் போட்டியாளர்களின் இன்ஸ்டகிராம் பக்கங்கள்!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-ம் பருவம் ஞாயிறு முதல் (அக்டோபர் 9) தொடங்கியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த முறை நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் ராஜு வென்றார். 

ஆறாவது முறையாக நடிகர் கமல் ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். அரசியல், நடிப்பு, தயாரிப்பு எனப் பல வேலைகளில் மும்முரமாக இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதிலிருந்து கமல் பின்வாங்குவதில்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களைச் சென்றடைவது அரசியலுக்கும் திரைப்படத்துறைக்கும் உதவும் என அவர் நம்புகிறார். அதனால் தான் விக்ரம் படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து தொகுத்து வழங்குகிறார். 

இந்நிலையில் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள். தொடக்க நாளன்று ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் 20 போட்டியாளர்களின் இன்ஸ்டகிராம் பக்கங்கள்:

1. ஜிபி முத்து

2. அசல்

3. ஷிவின் கணேசன்

4. அஸீம்

5. ராபர்ட் மாஸ்டர்

6. ஆயிஷா

7. ஷெரினா

8. மணிகண்ட ராஜேஷ்

9. ரச்சிதா

10. ராம் ராமசாமி

11. ஏடிகே

12. ஜனனி

13. சாந்தி

14. இரா. விக்ரமன்

15. அமுதவாணன்

16. மகேஸ்வரி

17. விஜே கதிரவன்

18. குயின்சி

19. நிவா

20. தனலட்சுமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com