கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சூர்யா - இயக்குநர் சிவா படத் தலைப்பு குறித்த தகவல்

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் தலைப்பு தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :14 அக்டோபர் 2022, 10:04 am

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் தலைப்பு தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த வணங்கான் திரைப்படம் சில காரணங்களால் பாதியில் நிற்கிறது. வணங்கான் படப்பிடிப்பு எப்பொழுது துவங்கும்? அல்லது படம் கைவிடப்பட்டதா? என்பது குறித்தான தகவல் எதுவும் இல்லை. 

தற்போது சூர்யா, சிவா இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்தில் தீஷா பதானி நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புனேவில்  நடைபெற்றது. 

அப்போது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் சூர்யாவுடன் இணைந்து நடித்ததாக கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இதன் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.