
90களில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் கார்த்திக்கின் புதிய படத்தில் சன்னி லியோன் நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன். 2012 முதல் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். கடந்த 2011-ல் அமெரிக்க நடிகரான டேனியல் வெப்பரைத் திருமணம் செய்தார் சன்னி லியோன்.
‘தீ இவன்’ படத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் சுகன்யா, ராதா ரவி, அஸ்மிதா, யுவராணி, சிங்கம் புலி, ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை டிஎம். ஜெயமுருகன் இயக்குகிறார். இவர் இதற்குமுன் ரோஜா மலரே, சிந்துபாத் போன்ற படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு- ஒய்.என். முரளி, படத்தொகுப்பு- மொஹமது இட்ரிஸ் , இசை- ஆஜ் அலி மிஸ்ரா.
இந்தப் படத்தின் கதை மற்றும் நடிகர்கள் பிடித்துள்ளதாகவும் பாடல் வரிகள் மிகவும் பிடித்ததாகவும் நடிகை சன்னி லியோன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் இயக்குநர் ராஜமௌலி - மகேஷ் பாபு படம்
7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகவிருக்கும் விஜய் சேதுபதி - விஷ்ணு விஷாலின் 'இடம் பொருள் ஏவல்'
போதைப் பொருள் சர்ச்சை - ரசிகர்களிடம் யுவன் கோரிக்கை
தீபாவளிக்கு வெளியாகிறது 'வாரிசு' முதல் பாடல் - தமன் என்ன சொல்கிறார்?
நடிகை லைலாவின் குடும்பத்தைப் பார்த்திருக்கிறீர்களா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.