47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இறுதிக்கட்டத்தில் ‘பத்து தல’ படப்பிடிப்பு

நடிகர் சிம்பு நடித்துவரும் ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2022, 4:47 am

DIN

நடிகர் சிம்பு நடித்துவரும் ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

முஃப்தி என்ற கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக் 'பத்து தல' என்ற பெயரில் உருவாகிறது. இந்தப் படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். 

முதல்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததும் சிம்பு அமெரிக்கா சென்றார். அதன்பின் படக்குழுவினர் மீண்டும் ‘பத்து தல’ படப்பிடிப்பை  மைசூரில் துவங்கினர்.

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கிவருகிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.