புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பா.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' ஓடிடி வெளியீடு குறித்த தகவல்

இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 7:33 am

DIN

இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. பெரும்பாலானோர் படத்தைப் பாராட்டினாலும் படத்துக்கு, எதிர்மறை விமர்சனங்களும் கிடைத்துள்ளன. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். 

நட்சத்திரம் நகர்கிறது படத்தில் கலையரசன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தென்மா இந்தப் படத்துக்கு இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இதனையடுத்து பா.ரஞ்சித் தற்போது விக்ரம் நாயகனாக நடிக்க ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கான முன்கட்ட தயாரிப்பு பணிகளில் அவர் ஈடுபட்டுவருகிறார். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.