
நித்தம் ஒரு வானம் படத்தின் பெண் கதாபாத்திரங்களின் பெயர்களை படக்குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
அபர்ணா பாலமுரளி, ரிது வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோருடன் அசோக் செல்வன் இணைந்து நடிக்கும் படம் ‘நித்தம் ஒரு வானம்’. அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திக் இப்படத்தினை இயக்கியுள்ளார்.
வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
சுபாவாக ரிது வர்மா, மதியாக அபர்ணா பாலமுரளி, மீனாட்சியாக சிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
Introducing our free sprited, bold, cheeky and warm female leads of #Aakasham@riturv @AshokSelvan@Aparnabala2 @ShivathmikaR
— Ra.Karthik (@Rakarthik_dir) September 13, 2022
@AndhareAjit @PentelaSagar @riseeastcre @Viacom18Studios @GopiSundarOffl @vidhu_ayyanna @vamsikaka pic.twitter.com/X8WtQxN6tM