நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வைபவ் நடிப்பில் உருவான ’பபூன்’ டிரைலர் வெளியீடு

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள பபூன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :14 செப்டம்பர் 2022, 11:59 am

DIN

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள பபூன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

’மேயாத மான்’ திரைப்படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் பபூன் திரைப்படத்தில் வைபவ் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக ’நட்பே துணை’ நாயகி அனகா நடித்துள்ளார்.

மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஆந்தங்குடி இளையராஜா, நரேன் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். 

அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன் இயக்க,  தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். புலனாய்வு பாணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின்  டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது டிரைலரும் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.