விருதுகளைக் குவிக்கும் ‘ஸ்குவிட் கேம்’

உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ’ஸ்குவிட் கேம்’ இணையத் தொடர் எம்மி விருதுகளை வென்றுள்ளது.
விருதுகளைக் குவிக்கும் ‘ஸ்குவிட் கேம்’

உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ’ஸ்குவிட் கேம்’ இணையத் தொடர் 6 எம்மி விருதுகளை வென்றுள்ளது.

பணத்தேவை உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு குழுவால் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. வெல்லும் ஒரு நபருக்கு பல நூறு கோடிகள் பரிசாக அளிக்கப்படும். தோற்கும் வீரர்கள் வீட்டிற்குச் செல்லலாமா? இல்லை. அங்கேயே சுட்டுக்கொல்லப்படுவார்கள். ஒவ்வொரு நிமிடமும் பதற்றமான ஆக்கத்துடன் மொத்தம் 400 வீரர்கள் விளையாடும் கதையே ‘ஸ்குவிட் கேம்’(squid game) இணையத் தொடர்.

நெட்பிளிக்ஸில்  வெளியான  இந்த தென் கொரிய தொடர் தற்போதுவரை உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருவதோடு ரூ.12,000 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனையும் செய்துள்ளது.

லீ ஜங் ஜே
லீ ஜங் ஜே

இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற டிவி மற்றும் இணைய தொடருக்கான விருதுகளை வழங்கும் ‘எம்மி விருதுகள்’ நிகழ்ச்சியில் மொத்தம் 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஸ்குவிட் கேம் தொடருக்கு சிறந்த நடிகர்(லீ ஜங் ஜே) உள்பட 6 விருதுகள் கிடைத்துள்ளது.

முன்னதாக, சினிமா விருதுகளில் ஆஸ்கருக்கு நிகராகக் கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருதை சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் ஸ்குவிட் கேமில்  நடித்த ஓசங் சோ பெற்றிருந்தார். அவர் நடித்த ’பிளேயர் 001’ என்கிற கதாப்பாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com