பிடித்த திரைப்படங்கள் - பிரபல நடிகருடன் உரையாடிய ராகுல் காந்தி

பிரபல நடிகருடனான சந்திப்பில் தனக்கு பிடித்த திரைப்படங்கள் குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார். 
பிடித்த திரைப்படங்கள் - பிரபல நடிகருடன் உரையாடிய ராகுல் காந்தி

 பிரபல நடிகருடனான சந்திப்பில் தனக்கு பிடித்த திரைப்படங்கள் குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார். 

நாடு முழுவதும் 150 நாள்கள் இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டுவருகிறார். இந்த பயணத்தின் போது மக்களை நேரில் சந்தித்து குறைகளை அவர் கேட்டறிந்துவருகிறார்.

இந்த பயணத்தின்போது பிரபலங்களும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று (ஆகஸ்ட் 18) பிரபல மலையாள நடிகர் வினு மோகன் ராகுல் காந்தியை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். 

அப்போது  வினு மோகனுடன் ராகுல் காந்தி பேசியதாவது,  ''நான் ஆங்கில படங்கள் பார்ப்பேன். ஆனால் எனக்கு ஈரானிய படங்கள்தான் மிகவும் பிடிக்கும்.

ஈரானிய படங்களில் கதை மற்றும் காட்சியமைப்பும் சுவாரசியமாக இருக்கும்'' என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் வினுவின் படங்களை பார்க்க ராகுல் காந்தி ஆர்வம் காட்டினாராம். இதன் ஒரு பகுதியாக வினு தனது தாத்தா கொட்டரக்கர ஸ்ரீதரன் நாயர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்து தேசிய விருது பெற்றதாக தெரிவிக்க ராகுல் காந்தி மிகவும் மகிழ்ந்தாராம்.  

வினு மோகனின் அப்பா சாய்குமாரும் பிரபல மலையாள நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.வினு மோகனின் மனைவி வித்யா சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் அபியும் நானும் தொடரில் நடித்துவருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com