விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜெயிலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

ஜெயிலர் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :25 ஏப்ரல் 2023, 10:36 am

ஜெயிலர் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

படத்துக்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தில் வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோரின் தோற்ற புகைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. 

இப்படம் முதலில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், படப்பணிகள் தாமதாக நடைபெற்று வருவதால் ரிலீஸ் தள்ளிப் போகியுள்ளது.

இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஜெயிலர் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.