மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வானத்தை போல சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்!

வானத்தை போல சீரியலில் இருந்து விலகுவதாக முக்கிய பிரபலம் ஒருவர் அறிவித்துள்ளார்.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 10:39 am

வானத்தை போல சீரியலில் இருந்து விலகுவதாக முக்கிய பிரபலம் ஒருவர் அறிவித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தை போல தொடர் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடர் அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக இந்தத் தொடரில் இருந்து துளசியாக நடித்த ஸ்வேதா வெளியேறினார். அவருக்கு பதிலாக பிரபல கன்னட சின்னத்திரை நடிகை மான்யா நடித்து வருகிறார். இந்தத் தொடரில் சின்ராசுவாக நடித்த தமன் வெளியேறியதால், தற்போது ஸ்ரீ குமார் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் தேப்ஜானி வானத்தை போல சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வானத்தைப் போல தொடரில் முக்கிய கதாப்பாத்திரங்கள் விலகி வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேப்ஜானி  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளார். இவர் ராசாத்தி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.