
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடருக்கு பிற மொழியிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையைச் சேர்ந்த பலரையும் கவரும் வகையில் எடுக்கப்படுவது வழக்கம்.
அந்தவகையில் பாக்கியலட்சுமி தொடருக்கு அனைத்துத் தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் பாக்கியலட்சுமி தொடரே டிஆர்பி பட்டியலில் முதன்மை இடத்தில் உள்ளது.
கடந்த வாரம் டிஆர்பி பட்டியலில் 8.37 புள்ளிகளைப் பெற்று விஜய் தொலைக்காட்சித் தொடர்களில் முதலிடம் வகித்தது.
விஜய் தொலைக்காட்சியின் தற்போது ஒளிபரப்பாகும் தொடர்களில் இளம் நாயகிகளே முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மற்ற எந்தத் தொடரிலும் இல்லாதவகையில் பாக்கியலட்சுமி தொடரில் 40 வயதைக் கடந்த பெண்மணி தொடரின் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்தத் தொடரில் நாயகியாக நடித்துவரும் கே.எஸ். சுசித்ரா சிறந்த நடிகைக்கான விஜய் டிவி விருதைப் பெற்றுள்ளார்.
பாக்கியலட்சுமி தொடர் காப்புரிமை பெறப்பட்டு தற்போது தெலுங்கு மொழியில் எடுக்கப்படவுள்ளது. தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு மொழியிலும் பாக்கியலட்சுமி தொடர் எடுக்கப்படவுள்ளது. இந்தத் தொடரில் பாக்கியா பாத்திரத்தில் நடிப்பது யார்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
பாக்கியலட்சுமி தொடர் முடிவதற்கு முன்பே அதன் வரவேற்பால் தெலுங்கிலும் எடுக்கப்படவுள்ளதால், இது அந்தத் தொடருக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.