/

வெளியானது ஜெயிலர் டிரைலர்!

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:46 am

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மற்றும் சிவராஜ்குமார் வில்லனாகவும் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில், படத்தின் ‘ஷோ கேஸ்’ என்கிற டிரைலர் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.