
1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.
இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் பெரிய கவனத்தையும் பெறுகின்றன.
இந்நிலையில், நீண்ட நாள்களாக இளையராஜா தன் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்காக முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து திரைக்கதையை எழுதி வருவதாகவும் இப்படத்தை இயக்குநர் பால்கி இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.
தற்போது, இப்படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. காரணம், இளையராஜா தனிப்பட்ட முறையிலேயே தனுஷின் நடிப்புத் திறனை விரும்புகிறவராம்.
மேலும், ராஜாவாக நடிக்க தனுஷின் தோற்றமும் சரியாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்.
இதையும் படிக்க: 4 தேசிய விருதுகளைப் பெற்ற பாலிவுட் கலை இயக்குநர் தற்கொலை!
இந்தாண்டு இறுதியில் இளையராஜா பயோபிக் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.