மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அனிருத்துக்காக யுவனிடம் சொன்ன விஷயம்... சந்தோஷ் நாராயணனின் தாராள குணம்!

புதிய கீதை திரைப்படத்துக்கு பிறகு நடிகர் விஜய்க்கு யுவன் இசையமைக்கவுள்ளார். 

News image
Updated On :3 ஆகஸ்ட் 2023, 1:17 pm

DIN


அனிருத்துக்கு ஆதரவாக யுவன் ஷங்கர் ராஜாவிடம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சொன்ன விஷயம் இணையத்தில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். வெங்கட் பிரபுவின் அநேக படங்களுக்கு யுவனே இசையமைப்பாளர். அந்தவகையில் புதிய கீதை திரைப்படத்துக்கு பிறகு நடிகர் விஜய்க்கு யுவன் இசையமைக்கவுள்ளார். 

இந்நிலையில், தனது அடுத்த பெரிய பாடலுக்கு எந்த இசையமைப்பாளருடன் இணைந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்களிடம் டிவிட்டரில் யுவன் ஷங்கர் ராஜா கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு இதோ நான் ரெடி என வடிவேலு கிளம்பி வேகமாகச் செல்லும் புகைப்படத்தை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பகிர்ந்திருந்தார். 

இதனிடையே தான் அடுத்த பாடலுக்கு அனிருத்துடன் இணைந்து பணிபுரியவுள்ளதை யுவன் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

அதோடு மட்டுமல்லாமல், சந்தோஷ் நாராயணனின் பதிவை மறுபதிவு செய்த யுவன் ஷங்கர் ராஜா, சார், நம்ம பாடலும் (யுவந்சந்தோஷ் கூட்டணி) இருக்கு. அதற்காக காத்திருக்க முடியவில்லை என பதிலளித்திருந்தார். 

அதற்கு பதிலளித்த சந்தோஷ் நாராயணன், சார். நீங்கள் அன்பானவர். யுவன் சங்கர் ராஜா - அனிருத் கூட்டணிக்கே எனது ஓட்டு எனப் பதிவிட்டுள்ளார்.

தற்கால தமிழ் சினிமாவின் இரு முன்னணி இசையமைப்பாளர்களின் இந்த டிவிட்டர் பேச்சுவார்த்தை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

அனிருத்துக்காக பதிவிட்டிருந்த சந்தோஷ் நாராயணனை அவரின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல், சந்தோஷ் நாராயணனுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக நீ விடு தல தளபதி 69-ல நாம பாத்துக்கலாம் என்பது போன்ற கருத்துகளையும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

நடிகர் விஜய்யின் 69வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கைப்பற்றியுள்ளதாக வெளியான தகவல்கள் அடிப்படையில் ரசிகர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். 

கார்த்திக் சுப்பராஜ் படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் ஆஸ்தான இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.