லால் சலாம் படத்தில், தான் இடம்பெறும் காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கும் விஷ்ணு விஷால், அதனை தனது மனைவியுடன் கேக் வெட்டி படப்பிடிப்பு தளத்திலேயே கொண்டாடியிருக்கிறார்.
லால் சலாம் படிப்பிடிப்பில் தனது பங்கு நிறைவு பெற்றதாகவும், என்ன ஒரு சிறந்த அனுபவப் பயணம்.. உணர்வுப்பூர்வமானதாக அமைந்திருந்ததாகவும் விஷ்ணு விஷால் பதிவிட்டு, புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க.. மயானத்தில் அரைகுறையாக எரிக்கப்படும் உடல்கள்!
லால் சலாம் படத்தின் முதல்கட்ட படிப்பிடிப்பு ஏற்கனவே மும்பை, திருவண்ணாமலை, புதுச்சேரி என பல இடங்களில் நடந்து முடிந்துள்ளது. கிட்டத்தட்ட படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவே கூறப்படுகிறது.
இதில், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினியின் காட்சிகள் 20 நிமிடங்கள் வரை இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜூலை மாதம் அறிவித்திருந்தார்.
தற்போது விஷ்ணு விஷாலும் தான் இடம்பெறும் படப்பிடிப்புக் காட்சிகள் நிறைவு பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளார். விரைவில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக மதவாதக் கட்சியல்ல! கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல்!
பேரவைத் தொகுதி அறிமுகம்! பத்மநாபபுரம்

சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு

தொகுதி விவரக் குறிப்பு: அரவக்குறிச்சி
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

