யூடியூப்பில் வெளியானது கமலின் ஹே ராம்! 

நடிகர் கமல்ஹாசன் எழுதி இயக்கிய ஹே ராம் திரைப்படம் தற்போது ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. 
யூடியூப்பில் வெளியானது கமலின் ஹே ராம்! 

தமிழின் மகத்தான நடிகராக வளர்ந்துள்ள கமல்ஹாசன் தனது 4வது வயதில் நடித்து 1960ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா படம் வெளியாகி சமீபத்தில் 63 ஆண்டுகள் முடிவடைந்ததை பலரும் கொண்டாடினர்.  

நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், பாடகர், நடனக் கலைஞர், தயாரிப்பாளர் என எந்தத் துறை எடுத்தாலும் அதில் கில்லாடியாக பணியாற்றும் திறமைசாலி கமல். தமிழ் சினிமாவில் பல வகையான புதிய டெக்னிக்கலான விசயங்களை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர். படங்கள் வசூலில் பிரச்னை ஏற்பட்டாலும் தனது சோதனை முயற்சியை கைவிடுவதே இல்லை. ஓடிடி வருவதையும் முன்னமே கணித்த என்ற பெருமைக்கு சொந்தக்காரர் கமல்தான். 

கமல் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்து 2000இல் வெளியான படம்தான் ஹே ராம். சாகேத் ராம் எனும் கதாபாத்திரம் காந்தியை கொலை செய்ய சென்று மனம் திருந்துவார். இதில் ஷாருக்கான், ஹேமா மாலினி, ராணி முகர்ஜி என பலர் நடித்திருப்பார்கள். இளையராஜா அற்புதமாக இசையமைத்திருப்பார். கமல் எடுத்தப் படங்களில் மிகவும் விமர்சன ரீதியாக பாராட்டும் படங்களில் இது முதன்மையானதாக இன்றளவும் உள்ளது.  

சுதந்திர நாளினை முன்னிட்டு காந்திக்கு சமர்பணம் செய்து இதனை தனது ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இதனை எந்தவித கட்டணமுமின்றி ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com