புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஜெயிலர் பார்த்தபின் ரஜினி இதைத்தான் சொன்னார்..: நெல்சன்

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஒரு வாரமான நிலையில், படத்தின் வெற்றி விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2023, 9:29 am

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வாரம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.

இந்நிலையில், முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Story image

எந்திரன், கபாலி, 2.0 திரைப்படங்களை தொடர்ந்து, ரஜினியின் நான்காவது படமாக ஜெயிலர் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், படத்தின் வெற்றி விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இயக்குநர் நெல்சன், ‘ ரஜினி சார் ஜெயிலர் படத்தை பார்த்தபின் படம் எப்படி இருக்கிறது? எனக் கேட்டேன். அதற்கு அவர், ‘நான் நினைத்ததைவிட 10 மடங்கு நன்றாக இருக்கிறது. இதை எதிர்பார்க்கவில்லை’ எனக் கூறினார் என்பதைக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.