ரஜினி - 170 படத்தின் வில்லன் இவரா? எதிர்பார்ப்பைக் கிளப்பும் கூட்டணி!
ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படத்தின் வில்லனாக நடிக்கவுள்ள நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் வெளியான ஒரு வாரத்தில் உலகளவில் ரூ.375 கோடி வசூலித்துள்ளது. அடுத்ததாக, ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்குகிறது.
மேலும், இப்படத்திற்கு ‘வேட்டை’ எனப் பெயரிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியின் மறுதேதி அறிவிப்பு!
இந்நிலையில், இதில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாகவும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் ரஜினியும் அமிதாப் பச்சனும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் இருவரும் இணைந்து, 'அந்தாகானூன்’ 'ஹேராஃப்தார்’, ‘ஹும்’ ஆகிய படங்களிலேயே நடித்துள்ளனர்.
அமிதாப் நடிப்பில் வெளியாகி வெற்றியைப் பெற்ற ‘டான்’ படத்தை தமிழில் ‘பில்லா’ என ரீமேக் செய்து ரஜினி நடித்திருந்தார். இது ரஜினிக்கு பெரிய வசூலைக் கொடுத்த படங்களுள் ஒன்று!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...