பிக் பாஸ் சீசன் 7 தொடங்கும் தேதி குறித்த தகவல்!

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கும் தேதி குறித்த தகவல்!

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கும் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கும் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் வெற்றியாலராக அறிவிக்கப்பட்டார். அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

முன்னதாக, பிக் பாஸ் 7வது சீசனக்கான முன்னோட்டக் காட்சி வெளியானது. ஆறு சீசன்களை தொடர்ந்து 7வது சீசனிலும் கமல்ஹாசனே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

தற்போது போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதில், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் சிலர் பங்குகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 8 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடக்க விழாவுடன் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சேனல் தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com