பிரபல தயாரிப்பாளரிடமிருந்து பாலியல் தொந்தரவு: அனு இமானுவேல் புகார்

பிரபல தயாரிப்பாளரிடமிருந்து பாலியல் தொந்தரவு: அனு இமானுவேல் புகார்

நடிகை அனு இமானுவேல் தன்னை பிரபல தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்ததாக பரபரப்பு தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

கேரளத்தைச் சேர்ந்த நடிகை அனு இமானுவேல் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

அதன் பின், சில படங்களில் நாயகியாக நடித்தார். தொடர்ந்து, ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாகவும் சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் நாயகியாகவும் நடித்திருந்தார். கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும், தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அனு இமானுவேல் பேட்டி ஒன்றில், “நான் சினிமாவுக்கு வந்த புதிதில் சில பெரிய மனிதர்கள் எனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தனர். குறிப்பாக, வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா என அழைத்தார்கள். அப்படி, சமீபத்தில் ஒரு பிரபல தயாரிப்பாளரும் என்னை படுக்கைக்கு அழைத்தார். ஆனால், நான் இதற்கெல்லாம் பயப்படமால் என் குடும்பத்தினர் உதவியோடு எதிர்கொண்டேன். இந்த மாதிரியான பிரச்னைகளைக் கண்டு பயப்படாமல் துணிச்சலாக முன்னேறிச் செல்ல வேண்டும்” எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com