ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஜவான் - ராமையா வஸ்தாவையா பாடல் வெளியீடு!

ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் 'நாட் ராமையா வஸ்தாவையா' பாடல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2023, 10:12 am

DIN

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையில்இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் 3வது பாடலான ‘நாட் ராமையா வஸ்தாவையா’ பாடலை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

1955இல் வெளியான ஸ்ரீ 420 எனும் ஹிந்திப் படத்தில் ராமய்யா வஸ்தாவய்யா பாடல் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. 

YouTube video thumbnail

மேலும் ஆக. 30ஆம் நாள் சென்னையில் உள்ள தனியார் கல்லூர் ஒன்றில் ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.