
நடிகர் விஷால் இயக்குநர் ஹரியுடன் 3வது முறையாக இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக 2007இல் இந்த கூட்டணியில் வெளியான தாமிரபரணி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. பின்னர் 2014இல் வெளியான பூஜை கலவையான விமர்சனங்களை பெற்றன.
இதையும் படிக்க: ரசிகர்களை ஏமாற்றிய சமந்தா, விஜய் தேவரகொண்டா: இதுதான் காரணமா?
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்சர்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘விஷால் 34’ என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார்.
எம்.சுகுமார் ஒளிப்பதிவில், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியளிக்க பாடலாசிரியர் விவேக் பாடல் எழுத உள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிர்சாந்த் இசையமைக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விஷால் படக்குழுவுடன் தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் இயக்குநர் ஹரி, பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.