இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கேப்டன் மில்லர் - பிரியங்கா மோகனுக்கான படப்பிடிப்பு நிறைவு!

கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் பிரியங்கா மோகனுக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2023, 12:23 pm

DIN


அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர் தனுஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு  கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதிரடி காட்சிகளால் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், யூடியூப்பில் 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இப்படம் வருகிற டிச.15 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்படுள்ளது.

இதையும் படிக்க | தெலுங்கு படத்தில் ஆர்யா!

 கேப்டன் மில்லரில் தனுஷின் அண்ணனாக வரும் சிவராஜ் குமார், படத்தின் முக்கிய வில்லனாக இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Story image

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரியங்கா மோகனுக்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.