

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருக்கிறார். சில ஆண்டுகளாக தோல்விப் படங்களையே அதிகம் தந்தவர், சார்பட்டா படத்தின் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார்.
அதன்பின், அவர் நடிப்பில் வெளியான 'அரண்மனை 3’, ‘எனிமி’, ‘கேப்டன்’, ‘காதர்பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றிகளைத் தரவில்லை. தற்போது, மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்ற ஷாருக்கான்!
இந்நிலையில், தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகும், ‘சைந்தவ்’ படத்தில் ஆர்யா மனாஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், சைலேஷ் கொலனு இயக்கும் இப்படத்தில் நவாஸுதீன் சித்திக், ஆண்ட்ரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.