மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விஜய் சேதுபதி - மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் பெயரின் அறிவித்துள்ளனர்.

News image
Updated On :1 டிசம்பர் 2023, 5:33 am

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி  நுட்பமான கதைகளை இயக்கி வருபவர் இயக்குநர் மிஷ்கின். 

இசை மீது அதீத ஆர்வம் கொண்ட மிஷ்கின், சமீபத்தில் இசை பயிற்சியும் எடுத்துக்கொண்டார். டெவில் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.

மேலும், நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்தாக லியோவிலும் கவனிக்கும்படியாக நடித்திருந்தார்.

மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் துவங்க உள்ளதாகவும் இதற்கான முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி - மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘ட்ரெயின்' (train) எனப் பெயரிட்டுள்ளனர். கலைப்புலி எஸ். தாணு இப்படத்தைத் தயாரிக்கிறார். இன்று படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இசை - மிஷ்கின்.

ட்ரெயின் படத்தின் நாயகியாக டிம்பிள் ஹயாதியும் முக்கிய கதாபாத்திரங்களில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ் , பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Story image

மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘பிசாசு - 2’ திரைப்படம் சில பிரச்னைகளால் இன்னும் வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.