200, 300 படங்களில் நடிப்பதைவிட தரமான படங்களில் நடிப்பதே முக்கியம்: நானி 

 பிரபல தெலுங்கு நடிகர் நானி படத்தின் எண்ணிக்கையை விட அதன் தரத்தில் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார். 
200, 300 படங்களில் நடிப்பதைவிட தரமான படங்களில் நடிப்பதே முக்கியம்: நானி 

தமிழில் வெப்பம், ஆஹா கல்யாணம், நான் ஈ படங்களின் மூலம் பிரபலமானவர் நானி. தெலுங்கில் வெளியான நானியின் ஜெர்ஸி, கேங்கு லீடர், சியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா, தசாரா ஆகிய படங்கள் பெரும் வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

நானியின் 30வது படத்தினை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஷௌர்யுவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ‘ஹாய் நான்னா’ எனப் பெயரிடப்பட்டு  உள்ளது.   வைரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக சீதா ராமம் புகழ் மிருணாள் தாக்குர் நடித்துள்ளார். 

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹீஷம் அப்துல் வாஹாப் இசையமைத்துள்ளார்.   

நல்ல கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கான படங்களை தேர்வு செய்து நடிக்கும் நானியின் படங்களுக்கு தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புள்ளது. 

தற்போது படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. டிச.7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடனம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. 

யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய நானி, “எனக்கு 200, 300 படங்களில் நடிக்க ஆசை இல்லை. படத்தின் எண்ணிக்கையை விட அதன் தரத்தில் கவனம் செலுத்துகிறேன். இப்போது 300 படம் நடித்திருந்தாலும் பிடித்த படம் என்று பிறரை சொல்ல சொன்னால் 2 அல்லது 3 படங்களை மட்டுமே சொல்வார்கள். நான் அந்தப் பட்டியலை அதிகரிக்க முயல்கிறேன். 

புதுமையான கதைகளை தேர்வு செய்கிறேன். அதில் ஆபத்தும் உள்ளது. அதே சமயம் அதுதான் எனக்கு பிடித்துள்ளது. ஒரே மாதிரியான படங்களில் நடிக்க எனக்கு சலிப்பு ஏற்படுகிறது. கிளாடியேட்டர், கேம் ஆஃப் த்ரோன்ஸ் மாதிரியான படங்களில் நடிக்க ஆசையுள்ளது” எனக் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com