தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சீயான்: வைரலாகும் நடிகர் விக்ரமின் பதிவு!

சேது படத்தின் 24ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடிகர் விக்ரம் தனது எக்ஸ் பதிவில் சீயானுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். 

News image
Updated On :11 டிசம்பர் 2023, 9:11 am

DIN

தனது கடின உழைப்பினால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ரசிகப்படுபவர் நடிகர் விக்ரம். இவரது உடலை வருத்திக் கொண்டு நடிக்கும் முறையை பலரும் புகழ்ந்து பேசியுள்ளார்கள். இவருக்கு தேசிய விருது கிடைக்காதது அந்த விருதுக்குதான் குறைச்சல் என்ற அளவுக்கு பல படங்களில் அற்புதமாக  நடிப்பில் அசத்தியுள்ளார். 

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இதன்மூலம் நல்ல வரவேற்பினைப் பெற்ற விக்ரம் பா.இரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

Story image

விக்ரமின் 62வது படத்தை சித்தா இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார் இயக்க உள்ளார். இவரது துருவ நட்சத்திரம் படம் பொருளாதாரப் பிர்சனைகளால் தள்ளிப்போனது. இன்னும் ரிலீஸ் தேதி உறுதிப்படுத்தப்படவில்லை. 

Story image

பாலாவின் இயக்கத்தில் 1999இல் வெளிவந்த திரைப்படம் சேது. இதில் விக்ரமின் பெயர் சீயான் என அழைக்கப்படும். பின்னர் அதுவே அவரது பெயராக அமைந்தது. சேது படம் வெளியாகி இன்றோடு 24 ஆண்டுகள் ஆகின்றது. 

இந்நிலையில் நடிகர் விகரம் தனது எக்ஸ் பதிவில், “இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சீயான்!!" எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.