
மிக்ஜம் பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதியிடம் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வழங்கினார்.
இதுகுறித்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் – இயக்கங்கள் - தனிநபர்கள் என பலரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நம்மை சந்தித்த போது, நடிகர் – சகோதரர் சிவகார்த்திகேயன், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும் - நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம் - இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.