மீட்புப் பணியில் உதயநிதியுடன் மாரி செல்வராஜ்!

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து இயக்குநர் மாரி செல்வராஜ் மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்.
மீட்புப் பணியில் உதயநிதியுடன் மாரி செல்வராஜ்
மீட்புப் பணியில் உதயநிதியுடன் மாரி செல்வராஜ்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து இயக்குநர் மாரி செல்வராஜ் மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களுடன் இயக்குநர் மாரி செல்வராஜும் இணைந்து மீட்புப் பணிகளை செவ்வாய்க்கிழமை மாலை முதல் ஈடுபட்டு வருகிறார்.

முன்னதாக, எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த மாரி செல்வராஜ்,

“வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது.

மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின்  வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை.

இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com