அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள்.
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது. படம் மக்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பினை பெற்று வருகிறது. சிலர் பெண்களுக்கு எதிரான படம் எனவும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் படம் ரூ. 862 கோடி வசூலித்துள்ளது.
சில விமர்சகர்கள் அனிமல் படம் பெண்களுக்கு எதிரான படமென விமர்சித்தார்கள். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தினை கிளப்பியது. அர்ஜுன் ரெட்டி படம் முதலே சந்தீப் வங்கா படத்துக்கு இந்தப் பிரச்னைகள் இருந்து வருகின்றன.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் சந்தீப் வங்கா பதிலளித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது:
ரன்பீர் கதாபாத்திரம் (ரன்விஜய்) ஆணாதிக்க மிக்கதாக பலரும் கூறுகிறார்கள். எனக்கு அப்படி தோன்றவில்லை. 20, 30 ஜோக்கர்களை தவிர அனிமல் படம் மக்களுக்கு பிடித்திருக்கிறது. படத்தில் இல்லாதது மட்டுமின்றி தவறாக புரிந்துக் கொண்டு படத்தினை மக்களுக்கு தவறாக பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் போலியான பெண்ணியவாதிகள். எனக்கு அவர்களைப் பற்றி கவலை இல்லை. மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.
இதையும் படிக்க: டன்கி படத்தின் முதல்நாள் வசூல்: ஜவானை விட பல மடங்கு குறைவு!
ரன்பீர் ராஷ்மிகாவின் பிரா ஸ்ட்ரிப்பினை இழுக்கும் காட்சியை பலரும் தவறாக புரிந்து கொள்கிறார்கள். அதற்கு முன்பு உப்பினை அதிகமாக இட்டு பரிமாற கொடுத்த ராஷ்மிகாவின் செயலுக்கு மிகவும் மனம் உடைந்து விடுவான். 'இனிமேல் உப்பு போடாதே விஷம் இருந்தால் வைத்து விடு' என்பான். அதைத் தொடர்ந்து வரும் காட்சியே அது. ராஷ்மிகாவுக்கு இன்னொரு ஆணை திருமணம் செய்ய அவர்களது அம்மா முடிவெடித்திருப்பதும் அவனுக்கு உடல், மன ரீதியாக அந்த நேரத்தில் அனுபவித்து வருவதும் அதிகம்.
ஜோயா கதாபாத்திரம் அவனை ஏமாற்றி உளவு பார்த்து அவர்களது குடும்பத்தை கொல்ல வந்திருக்கிறாள். ஏமாற்றுபவர்கள் காதலிப்பதாக கூறினால் அந்த நேரத்தில் ஒருவன் அதை நிரூபிக்க எது முடியாதோ அதைதான் செய்ய சொல்லுவான். அதற்கும் உடனே இந்த போலியான பெணியவாதிகள் அவமரியாதை செய்துவிட்டதாக எழுதுவதை பார்க்க சிரிப்பாக இருக்கிறது. எனக்கு அந்த ஜோக்கர்களை பார்த்து பயமில்லை எனக் கூறினார்.
அனிமலுக்கு அடுத்து பிரபாஸை வைத்து ஸ்பிரிட் எனும் படத்தினை சந்தீப் இயக்க உள்ளார். அதற்கடுத்து அல்லு அர்ஜுனை வைத்து படமெடுக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவா? தேசிய தலைமை முடிவு செய்யும்!

விஜய் உடன் அமைச்சரவையும் பதவியேற்குமா? யார் யார் இடம்பெறுவர்?

வாக்களித்தவர்களுக்கு நன்றி; விஜய் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துகள் : சீமான்

ஏஐ திரைப்படங்களுக்கு ஆஸ்கர் கிடையாது!
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


