
இயக்குநர் அட்லி, ஷாருக்கான் கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் படம் ரூ. 1200 கோடி வசூலித்தது.
தொடர்ந்து, பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த டன்கி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் டாப்ஸி, விக்கி கெளஷல், சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இதையும் படிக்க: பிரபாஸின் ரத்த பூமி .. சலார் - திரை விமர்சனம்
உலகளவில் வெளியான இப்படம் இதுவரை விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் படக்குழு உலகம் முழுவதும் ரூ. 58 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படம் முதல்நாளில் ரூ. 129.6 கோடி வசூலித்தது. டன்கி படம் இதில் 50 சதவிகிதத்தைக்கூட வசூலிக்கவில்லை. ஆக்ஷன் அல்லாத படங்களுக்கு இது சகஜம் என விமர்சகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.