'அன்பே வா' சீரியல்! பிப்ரவரியில் முடிகிறதா? பிப்ரவரி வரை நீட்டிக்கப்படுகிறதா?

சன் தொலைககாட்சியில் ஒளிபரப்பாகிவரும் அன்பே வா தொடர் வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடையவுள்ளது.
'அன்பே வா' சீரியல்! பிப்ரவரியில் முடிகிறதா? பிப்ரவரி வரை நீட்டிக்கப்படுகிறதா?

சன் தொலைககாட்சியில் ஒளிபரப்பாகிவரும் அன்பே வா தொடர் வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடையவுள்ளது. அன்பே வா தொடர் முடிவடையவுள்ளதாக கடந்த இரு மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பிப்ரவரியில் முடியவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், அன்பே வா தொடரின் கதை பிப்ரவரியில் முடிகிறது என்பதை விட பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதே பொருத்தமாக இருக்கும் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு அன்பே வா தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. இந்தத் தொடரில் டெல்னா டேவிஸ் நாயகியாகவும், விராட் நாயகனாகவும் நடித்து வந்தார். தற்போது நாயகியாக ஸ்ரீ கோபிகா நடித்து வருகிறார். 

அன்பே வா தொடரில் நடிகை ஸ்ரீ கோபிகா
அன்பே வா தொடரில் நடிகை ஸ்ரீ கோபிகா

டெல்னா டேவிஸ் இறந்ததைப் போன்று கதை நகர்கிறது. இதனைத் தொடர்ந்து விரைவில் அன்பே வா தொடர் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. 

நவம்பர் 2020 முதல் இந்தத் தொடர் ஒளிபரப்பாகிவருவதால், திரைக்கதையை சுவாரசியமின்றி இழுத்துச்செல்லாமல், தொடரை விரைவில் முடிக்க வேண்டும் என்ற கருத்துகளும் ரசிகர்கள் மத்தியில் நிலவியது. 

விராட் - டெல்னா டேவிஸ்
விராட் - டெல்னா டேவிஸ்

இந்நிலையில், அன்பே வா தொடர் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சமூக வலைதளப் பதிவுக்கு ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதில், பிப்ரவரி மாதத்துடன் முடிகிறது என்பதற்கு பதிலாக, பிப்ரவரி வரை நீட்டிக்கப்படுகிறது என்பதே பொருத்தமாக இருக்கும் என்பதைப் போன்று கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com